/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலையில் அக். 14ல் பட்டமளிப்பு
/
பாரதியார் பல்கலையில் அக். 14ல் பட்டமளிப்பு
ADDED : செப் 16, 2024 05:57 AM

கோவை: கோவை பாரதியார் பல்கலையின், 39வது பட்டமளிப்பு விழா, வரும் அக்., 14ம் தேதி நடக்க உள்ளதாக பல்கலை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, ஜன., 23 முதல், செப்., 2024 வரை பல்கலை, உறுப்பு கல்லுாரிகள், தொலைநிலை கல்வி வாயிலாக பயின்று, தற்காலிக சான்றிதழ் பெற்றவர்கள் பட்டம் பெற தகுதி உடையவர்கள். மாணவர்கள், அந்தந்த கல்லுாரி முதல்வர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
பல்கலை இணையதளத்திலும் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து, வரும், 30ம் தேதிக்குள் விபரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.கடந்த, 2023, ஆக., 16 முதல், 2024, செப்., 25ம் தேதி வரை பி.எச்டி., முடித்து சென்றவர்கள், விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எச்டி., மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும், 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, www.b--u.ac.in அல்லது https://b--u.ac.in/298/convocation என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.