/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது
/
கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது
ADDED : ஆக 23, 2024 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து, 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அண்ணா நகர் பகுதியில் ரோந்து வந்த போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் பெயர் ஜகா பரிதா, 29, எனவும், அவரிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஜகா பரிதா, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.