/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாழடைந்து வரும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம்
/
பாழடைந்து வரும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம்
பாழடைந்து வரும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம்
பாழடைந்து வரும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம்
ADDED : ஜூன் 10, 2024 01:41 AM

சூலூர்:புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்காததால், சூலூரில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் பாழடைந்து வருகிறது.
சூலூர் சிறுவாணி டேங்க் ரோட்டில் உள்ள, பொன் விழா அரங்கத்துக்கு எதிரில், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன.
இதன் அருகில் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சூலூர் வட்டார அலுவலகம் செயல்பட்டு வந்தது.
சுமார், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், சேதமடைந்தது. அதனால், அங்கு பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்கள் அச்சத்துடன் பணியாற்றும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த அலுவலகம், சூலூர் வட்டார அலுவலக வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள சிறிய அறையில், 15 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இடநெருக்கடியால் சிக்கி தவிக்கும் அவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கூட்டங்களை நடத்தவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
நிதி ஒதுக்கீடு இல்லை:
பழைய கட்டடத்தை அகற்றி விட்டு, புதிய கட்டடம் கட்டப்படுமா என, அலுவலர்கள் எதிர்பார்த்துள்ளனர். புதிய கட்டடம் கட்ட இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. அதற்கான நிதி ஒதுக்கப்படவும் இல்லை. இதனால், பழைய அலுவலகம் பாழடைந்து, சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். உடனடியாக புதிய கட்டடம் கட்ட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

