/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வலுவிழந்த வேளாண் அலுவலகம் அச்சத்தில் அலுவலர்கள், விவசாயிகள்
/
வலுவிழந்த வேளாண் அலுவலகம் அச்சத்தில் அலுவலர்கள், விவசாயிகள்
வலுவிழந்த வேளாண் அலுவலகம் அச்சத்தில் அலுவலர்கள், விவசாயிகள்
வலுவிழந்த வேளாண் அலுவலகம் அச்சத்தில் அலுவலர்கள், விவசாயிகள்
ADDED : மார் 05, 2025 10:36 PM

சூலுார், ; சுல்தான்பேட்டை வேளாண் அலுவலகம், இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அலுவலர்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர்.
சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலக வளாகத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. 15க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரிகின்றனர். தினமும் ஏராளமான விவசாயிகள், இந்த அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகம் கட்டி, 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து செங்கல்கள் வெளியில் தெரிகிறது. தூண்கள் வலுவிழந்து விழும் நிலையில் உள்ளன.
மழை பெய்தால் ஒழுகி வருகிறது. இதனால், உள்ளே அமர்ந்து வேலை செய்யும் அலுவலர்களும், அவர்களை பார்க்க வரும் விவசாயிகளும் எப்போது, எப்படி விழுமோ என்று அச்சமடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
வேளாண் அலுவலகம் கட்டடம் கட்டி, 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. முற்றிலும் வலுவிழந்துள்ளது. உள்ளே செல்லவே அச்சமாக உள்ளது. பலமுறை மனு அளித்தும், ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றியும் மாவட்ட அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அலுவலர்களும் அச்சத்துடனே பணிசெய்து வருகின்றனர்.
உடனடியாக புதிய கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.