/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடாகம் ரோட்டில் தடுமாறும் வாகனங்கள்: ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்
/
தடாகம் ரோட்டில் தடுமாறும் வாகனங்கள்: ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்
தடாகம் ரோட்டில் தடுமாறும் வாகனங்கள்: ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்
தடாகம் ரோட்டில் தடுமாறும் வாகனங்கள்: ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்
ADDED : மே 31, 2024 02:17 AM

கோவை;தடாகம் ரோட்டில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறாக இருந்த கடைகள், 'ரேம்ப்' உள்ளிட்ட கட்டுமானங்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று அகற்றினர்.
தடாகம் ரோட்டில் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கையால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது.
தவிர, பெட்டி கடைகள், தள்ளுவண்டி கடைகள், பேக்கரிகள் ரோட்டை ஆக்கிரமித்து வருவது, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பது மட்டுமின்றி விபத்துக்கும் வழிவகுக்கிறது.
மேலும், நடைபாதையும் ஆக்கிரமிக்கப்படுவதால் பாதசாரிகள் வேறுவழியின்றி ரோட்டில் நடந்து செல்லும்போது விபத்தும் ஏற்படுகிறது.
இதையடுத்து, காந்திபார்க் பகுதியில் இருந்து வடக்கு நோக்கியும், இடையர்பாளையத்தில் இருந்து தெற்கு நோக்கியும், இரு பிரிவுகளாக மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், நேற்று ரோட்டையொட்டி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பலர் தாங்களாகவே முன்வந்து பெட்டி கடைகள், தள்ளுவண்டி கடைகளை அகற்றினர்.
அகற்றப்படாத கடைகள், நடைபாதையில் வாகனங்கள் கடந்துசெல்ல அமைக்கப்பட்டிருந்த ரேம்ப்', கடைகளை யொட்டி 'டைல்ஸ்' கற்கள், ரோட்டை நோக்கியிருந்த மேற்கூரை ஆகியவை பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றப்பட்டது.
தடாகம் ரோட்டையொட்டிய ஆக்கிரமிப்புகள் காரணமாக, போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதைடுத்து, இன்று, 50 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
- -- குமார், நகரமைப்பு அலுவலர்,
கோவை மாநகராட்சி