/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சீக்ரெட் சீல்' எடுத்து வருவதற்காக அதிகாரிகள் சென்னைக்கு பயணம்
/
'சீக்ரெட் சீல்' எடுத்து வருவதற்காக அதிகாரிகள் சென்னைக்கு பயணம்
'சீக்ரெட் சீல்' எடுத்து வருவதற்காக அதிகாரிகள் சென்னைக்கு பயணம்
'சீக்ரெட் சீல்' எடுத்து வருவதற்காக அதிகாரிகள் சென்னைக்கு பயணம்
ADDED : ஏப் 13, 2024 12:53 AM
கோவை;கோவையில், ஓட்டுகள் பதிவாகும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை 'ஸ்ட்ராங் ரூம்'களில் வைத்து பூட்டி, சீல் வைப்பதற்கான, நான்கு இலக்க எண்களுடன் கூடிய 'சீக்ரெட் சீல்' எடுத்து வர, சப்-கலெக்டர் தலைமையிலான ஒரு குழு, சென்னை விரைந்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, 19ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் ஓட்டுப்பதிவு முடிந்ததும், அரசியல் கட்சிகளின் பூத் ஏஜன்ட்டுகள் முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.
அவை, ஓட்டு எண்ணிக்கை மையமான, ஜி.சி.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்'களில், மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் 'சீல்' செய்து, பாதுகாப்பாக வைக்கப்படும்.
இதற்கு பயன்படுத்தப்படும், நான்கு இலக்க எண்களுடன் கூடிய 'சீக்ரெட் சீல்' எடுத்து வருவதற்கு, கோவையில் இருந்து சப்-கலெக்டர் தலைமையிலான குழு, சென்னை விரைந்திருக்கிறது.
இதுகுறித்து, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும், பிரத்யேகமாக நான்கு இலக்க எண்களுடன் கூடிய 'சீக்ரெட் சீல்' தேர்தல் ஆணையத்தில் இருந்து வழங்கப்படும்.
இந்த 'சீல்' பெறுவதற்காக அதிகாரிகள் குழு சென்னை சென்றுள்ளது. சீட் அடங்கிய பெட்டியை பாதுகாப்பாக எடுத்து வந்து, மாவட்ட தேர்தல் அதிகாரி வசம் ஒப்படைக்கும்.
'ஸ்ட்ராங் ரூம்'களுக்கு சீல் வைப்பது வரை, அப்பெட்டி அவர் வசம் பாதுகாப்பாக இருக்கும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், 'ஸ்ட்ராங் ரூம்'கள் சீல் வைக்கப்படும்.
அடுத்த சில நிமிடங்களில், 'சீக்ரெட் சீல்' மீண்டும் பாதுகாப்பாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்.
யாராவது 'சீல்'களை உடைத்து, அந்த அறைகளுக்குள் சென்றிருந்தால், எளிதாக கண்டறிந்து விடலாம்.
ஓட்டு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும், 'சிசி டிவி' கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. அந்த 'சீல்', ஓட்டு எண்ணும் நாளான, ஜூன் 4ம் தேதி, மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு உடைக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

