/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அணைக்கட்டு பகுதிக்கு செல்ல தடை: கம்பிவேலி அமைத்து அதிகாரிகள் எச்சரிக்கை
/
அணைக்கட்டு பகுதிக்கு செல்ல தடை: கம்பிவேலி அமைத்து அதிகாரிகள் எச்சரிக்கை
அணைக்கட்டு பகுதிக்கு செல்ல தடை: கம்பிவேலி அமைத்து அதிகாரிகள் எச்சரிக்கை
அணைக்கட்டு பகுதிக்கு செல்ல தடை: கம்பிவேலி அமைத்து அதிகாரிகள் எச்சரிக்கை
ADDED : ஏப் 27, 2024 01:29 AM

ஆனைமலை;ஆனைமலை அருகே, ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் தடையை மீறி சுற்றுலா பயணியர் குளிப்பதை தடுக்க, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை அருகே, ஆழியாறு சுற்றுலா பகுதியாக உள்ளது. இங்குள்ள அணை, பூங்கா மற்றும் கவியருவிக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணியரும் அதிகளவு வருகின்றனர்.
ஆழியாறு வரும் சுற்றுலா பயணியர், அங்குள்ள ஆழியாறு பள்ளி வளங்கல் அணைக்கட்டுப்பகுதியில் குளிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.தற்போது, கவியருவிக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால், அணைக்கட்டு பகுதியில் அதிகளவு சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர். ஆபத்தை உணராமல் அணைக்கட்டு பகுதியில் குளித்தனர்.
அணைக்கட்டுப்பகுதியில், அடிக்கடி ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதையும் தாண்டி சுற்றுலா பயணியர், ஆர்வ மிகுதியில் குடும்பத்துடன், சுழல், புதைமணல் உள்ள பகுதியில் குளிப்பது தொடர்கதையாகியுள்ளது.
இதுவரை, 150க்கும் மேற்பட்டோர் இங்கு நீரில் மூழ்கி இறந்துள்ளனர். கடந்த, 24ம் தேதி கோவை சட்ட கல்லுாரி மாணவர் கபிநாத், நீரில் மூழ்கி இறந்தார். இறப்புகளை தடுக்கும் வகையில் கம்பிவேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள், சுற்றுலா பயணியர் அணைக்கட்டு பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில், 'பென்சிங்' அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஏற்கனவே அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதை கண்டு கொள்ளாமல் சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்வதால், உரியிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்கும் வகையில் தற்போது, பள்ளி வளங்கல் அணைக்கட்டு பகுதிக்கு செல்லாமல் தடுக்க, 'பென்சிங்' அமைத்து எச்சரிக்கை பலகையும் வைக்கப்படுகிறது,' என்றனர்.

