/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போன் அழைப்பை ஏற்காத அதிகாரிகள் பொதுமக்கள் அதிருப்தி
/
போன் அழைப்பை ஏற்காத அதிகாரிகள் பொதுமக்கள் அதிருப்தி
போன் அழைப்பை ஏற்காத அதிகாரிகள் பொதுமக்கள் அதிருப்தி
போன் அழைப்பை ஏற்காத அதிகாரிகள் பொதுமக்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 02, 2024 02:21 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி தாலுகாவில், பல்வேறு துறை சார்ந்த உயரதிகாரிகள், அரசு வழங்கிய மொபைல் போன்களில், பொதுமக்களின் புகார் அழைப்புகளை எடுப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.
பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும், அதிகாரிகள் உடனுக்குடன் பணிகள் மேற்கொள்ளவும் அரசு தரப்பில் அனைத்து துறைகளை சேர்ந்த முக்கிய அதிகாரிகளுக்கும் மொபைல்போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் சேவைக்காக வழங்கப்பட்ட மொபைல்போன்களை, தற்போது எத்தனை அதிகாரிகள் முறையாக பயன்படுத்துகின்றனர் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
பொள்ளாச்சி தாலுகாவில், பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகள், அரசு வழங்கிய மொபைல்போன்களில், பொதுமக்களின் புகார் அழைப்புகளை எடுப்பதில்லை. அதிகாரிகள் பதில் அளிக்காமல், அழைப்பை தவிர்த்து வருவதால், முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
அதற்கு மாறாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தனிப்பட்ட மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொண்டாலும், அவர்கள் எந்த அழைப்பையும் ஏற்பதில்லை. அதிகாரிகளுக்கு தேவையான போன் அழைப்புகளை மட்டும் ஏற்கின்றனர்.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'அரசுத்துறையில் உயர்மட்ட பொறுப்பில் உள்ளதாலேயே அவரவரிடம் முறையிடுகின்றனர் என்ற எண்ணம், அதிகாரிகளுக்கு ஏற்படுவது கிடையாது. இதுபோன்று மொபைல்போன் அழைப்பை தவிர்க்கும் அதிகாரிகளைக் கண்டறிந்து, அவர்களை அறிவுறுத்த கலெக்டர் முன்வர வேண்டும்,' என்றனர்.