sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிய கல்லீரலில் பழைய நோய் ஏற்படுவது அரிது

/

புதிய கல்லீரலில் பழைய நோய் ஏற்படுவது அரிது

புதிய கல்லீரலில் பழைய நோய் ஏற்படுவது அரிது

புதிய கல்லீரலில் பழைய நோய் ஏற்படுவது அரிது


ADDED : ஜூலை 11, 2024 10:15 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும், அதை தானம் கொடுத்தவர்களும், ஒரு மாதத்தில் பழைய நிலைமைக்கு திரும்பி, இயல்பான வேலைகளை செய்ய முடியும்' என்கின்றனர், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை கல்லீரல் சிகிச்சைத்துறை டாக்டர்கள் பாரி விஜயராகவன் மற்றும் விஸ்வகுமார் பிரபாகரன்.

அவர்கள் கூறியதாவது:

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறந்த பலன்களை அளிக்கக்கூடியது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப்பின், புதிய கல்லீரல், மருந்துகளுக்கு உடல் பழக முதல் மூன்று மாதங்கள் தேவைப்படும்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்குள்ளாகவே, நோயாளிகள் தங்களை தாங்களே பார்த்துக்கொள்ள முடியும்.

கம்ப்யூட்டர் சார்ந்த பணி செய்வோர், அலுவலகம் செல்வோர், ஓரிரு மாதங்களில் பணிக்கு செல்லலாம்; உடல் உழைப்பு பணியில் ஈடுபடுவோருக்கு கூடுதலாக சிறிது காலம் தேவைப்படும். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும், அதை தானம் கொடுத்தவர்களும், ஒரு மாதத்தில் பழைய நிலைமைக்கு திரும்பி, இயல்பான வேலைகளை செய்ய முடியும்.

சிகிச்சைக்குப்பின், குறைந்தது ஓராண்டுக்கு கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது.

புதிய கல்லீரலில் பழைய நோய் ஏற்படுவது மிகவும் அரிது. கல்லீரல் தானமளிக்கும் சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் அதிக வலி இருக்காது.

சிகிச்சைக்குப்பின், தழும்பு மிக சிறிய அளவிலேயே இருக்கும்; வெளியில் தெரியாது. தானம் அளிப்பவர்கள் ஒரு வாரத்திலும், தானம் பெற்றவர், அவர் உடல் நிலையை பொறுத்து, 10 முதல் 14 நாட்களிலும் வீடு திரும்பலாம்.

சிகிச்சைக்குப்பின், நோயாளிகள் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். துவக்கத்தில், ஏழு அல்லது எட்டு விதமான மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். இதை படிப்படியாக குறைத்து கொள்ள மருத்துவர் பரிந்துரைப்பார்.

சிகிச்சை பெற்றவர்கள் ஆரோக்கியமான குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியும்.

கே.எம்.சி.,எச்.,ல் இதற்கான அனைத்து அதிநவீன சிகிச்சைகளும் உள்ளன. மேலும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us