/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் தொட்டி குழியில் விழுந்த முதியவர் உயிரிழப்பு
/
தண்ணீர் தொட்டி குழியில் விழுந்த முதியவர் உயிரிழப்பு
தண்ணீர் தொட்டி குழியில் விழுந்த முதியவர் உயிரிழப்பு
தண்ணீர் தொட்டி குழியில் விழுந்த முதியவர் உயிரிழப்பு
ADDED : செப் 08, 2024 11:09 PM
தொண்டாமுத்தூர்:தொம்புலிபாளையத்தில், தண்ணீர் தொட்டிக்கு குழி தோண்டி கொண்டிருந்தபோது, தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
இருட்டுப்பள்ளம், நொய்யல் நகரை சேர்ந்தவர் செல்வகுமார்,60; கூலித்தொழிலாளி. இவர், நேற்றுமுன்தினம் காலை, தொம்புலிபாளையத்தில் ஒரு வீட்டில், தண்ணீர் தொட்டி தோண்டும் பணிக்கு சென்றார்.
பணியின்போது, தண்ணீர் தொட்டிக்காக தோண்டப்பட்ட குழியில், செல்வராஜ் தவறி விழுந்தார். இதில், செல்வராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் செல்வராஜை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார். காருண்யா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.