/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பரோடா வங்கி சார்பில் எம்.எஸ்.எம்.இ., கிளை
/
பரோடா வங்கி சார்பில் எம்.எஸ்.எம்.இ., கிளை
ADDED : மே 22, 2024 01:09 AM

கோவை;கோவை, ராம் நகர், காளிங்கராயன் தெருவில், பரோடா வங்கி புதிய கட்டட திறப்பு விழா நடந்தது.
வங்கியின் வழக்கமான செயல்பாடுகளுடன், குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவு வாடிக்கையாளர்களுக்காக, எம்.எஸ்.எம்.இ., சிறப்பு செயல்பாடுகளை இக்கிளை மேற்கொள்ளும்.
வங்கி நிர்வாக இயக்குனர் சஞ்சய் விநாயக், காணொலி காட்சி வாயிலாக, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். வங்கியில், ஏ.டி.எம்., வசதியும் துவக்கி வைக்கப்பட்டது.
வங்கியின் பொது மேலாளர் (வசதிகள்) வேணுகோபால், காணொலிக் காட்சி வழியாக பேசுகையில், “எங்களின் சமூக பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில், கட்டடத்தில் சோலார் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை அளிக்கப்படும்,” என்றார்.
திறப்பு விழாவில், பிராந்திய மேலாளர் கமலக் கண்ணன், துணை பிராந்திய மேலாளர் பாலசுப்பிரமணியம், வங்கிக் கிளை தலைமை மேலாளர் தனசேகர், வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

