/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.டி.ஏ.டி., சார்பில் பயிற்சி வரும் 29ம் தேதி துவக்கம்
/
எஸ்.டி.ஏ.டி., சார்பில் பயிற்சி வரும் 29ம் தேதி துவக்கம்
எஸ்.டி.ஏ.டி., சார்பில் பயிற்சி வரும் 29ம் தேதி துவக்கம்
எஸ்.டி.ஏ.டி., சார்பில் பயிற்சி வரும் 29ம் தேதி துவக்கம்
ADDED : ஏப் 27, 2024 12:58 AM
கோவை;தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில், கோடைக்கால பயிற்சி முகாம் வரும், 29ம் தேதி துவங்குகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இந்தாண்டுக்கான, கூடைப்பந்து, வாலிபால், ஜிம்னாஸ்டிக், தடகளம், கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு வரும் 29ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை, நேரு ஸ்டேடியம் மற்றும் நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள, மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.
இந்த முகாமில், 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். தினமும் காலை, 6:00 முதல் 8:00 மணி வரையிலும், மாலை 4:30 முதல் 6:30 மணி வரையிலும், இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன.
பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தங்கள் ஆதார் கார்டுடன் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பயிற்சிக்கட்டணமாக ரூ. 200 ஆன்லைன் வாயிலாக வசூலிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, 74017 03489, 0422 2380010 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

