/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகாவீர் ஜெயந்தியன்றும் மது, இறைச்சி விற்பனை ஜோர்
/
மகாவீர் ஜெயந்தியன்றும் மது, இறைச்சி விற்பனை ஜோர்
ADDED : ஏப் 22, 2024 01:23 AM

கோவை;மகாவீர் ஜெயந்தியன்று மது, இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்ட நிலையில், கடைகளை திறக்காமல், விற்பனை நடந்தது.
மகாவீர் ஜெயந்தியான நேற்று, 'டாஸ்மாக்' மதுக்கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. மாநகரில் பெரும்பாலான ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்தன. அதேசமயம், ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
அசைவ பிரியர்கள் ஆடு, கோழி இறைச்சி தேடி அலைந்தனர். இறைச்சி வியாபாரிகளை தொடர்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, இறைச்சி விற்பனை செய்யப்பட்டது.
கணபதி, புலியகுளம், ஒண்டிப்புதுார், உக்கடம்,சிங்காநல்லுார்பகுதிகளில், விதியை மீறி வீடுகளில் கமுக்கமாக விற்பனை செய்தனர்.
அதேபோல், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு வெளியே, 'குவாட்டர்' ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து நன்கு தெரிந்தும், போலீசாரோ, அதிகாரிகளோ பெயரளவுக்குக்கூட நடவடிக்கை எடுக்கவில்லை.

