/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு புறம் பில்லுார் குடிநீர் வீண் மறுபுறம் வாகனங்கள் விபத்து
/
ஒரு புறம் பில்லுார் குடிநீர் வீண் மறுபுறம் வாகனங்கள் விபத்து
ஒரு புறம் பில்லுார் குடிநீர் வீண் மறுபுறம் வாகனங்கள் விபத்து
ஒரு புறம் பில்லுார் குடிநீர் வீண் மறுபுறம் வாகனங்கள் விபத்து
ADDED : மே 16, 2024 05:40 AM

கோவை, : சின்னவேடம்பட்டி மெயின் ரோட்டில் பில்லுார்-3 திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாவதுடன், குழியால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
மாநகராட்சி வடக்கு மண்டலம், சரவணம்பட்டி அருகே, 3வது வார்டு சின்னவேடம்பட்டி மெயின் ரோட்டில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இப்பகுதி மக்களுக்கு பில்லுார்-3 திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சின்னவேடம்பட்டி மெயின் ரோட்டில்(தனியார் பார்ட்டி ஹால் எதிரே) குழாய் உடைந்து குடிநீர் வீணாகிவருகிறது.
அப்பகுதி மக்கள் கூறுகையில்,'ரோட்டின் நடுவே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், ஏற்பட்ட குழி பெரிதாகி தினமும் இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் விபத்து நடக்கும் நிலையில் குழாய் உடைப்பை சரி செய்வதுடன், ரோட்டையும் சரி செய்ய வேண்டும்' என்றனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'இப்பிரச்னை உடனடியாக சரி செய்யப்படும்' என்றார்.