/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சியில் ஒரு நாள் கடையடைப்பு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்
/
பொள்ளாச்சியில் ஒரு நாள் கடையடைப்பு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்
பொள்ளாச்சியில் ஒரு நாள் கடையடைப்பு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்
பொள்ளாச்சியில் ஒரு நாள் கடையடைப்பு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்
ADDED : ஆக 14, 2024 01:19 AM

பொள்ளாச்சி;'பொள்ளாச்சியில் வணிக கட்டடங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட தனிநபர் கமிட்டி அமைக்க வேண்டும்' என வலியுறுத்தி, பொள்ளாச்சியில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில், விதிமீறல் எனக்கூறி கோர்ட் உத்தரவுப்படி மகாலிங்கபுரம், நியூஸ்கீம் ரோடு உள்ளிட்ட இடங்களில், கடைகளுக்கு, 'சீல்' வைக்கும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
இதனால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நியாயம் கோரியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பொள்ளாச்சி வணிகர்களின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட் டம் நேற்று நடந்தது.
நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிகவளாக கடைகள் மட்டுமே செயல்பட்டன. பெட்ரோல் பங்க், மருந்து கடைகள் வழக்கம்போல செயல்பட்டன. மற்ற அனைத்து வணிக கடைகள், ஹோட்டல்கள், பேக்கரிகள், துணிக்கடைகள் மூடப்பட்டதால் கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வணிகர்களின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகராட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு முன், வர்த்தக வணிக கட்டடங்கள் மீது விதிமீறல் மற்றும் நில ஆக்கிரமிப்பு என தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் தனிநபர் ஒருவர், உயர்நீதிமன்றத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்தார்.
இதன் காரணமாக, 250 வணிக கட்டடங்களுக்கு, 'சீல்' வைக்கும் நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. மகாலிங்கபுரம் வணிக மயமாக்கல் பிரச்னை முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளோம்.
கடந்த, 1971 முதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை பெருக்கம், நகரின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு நகரின் விரிவான திட்ட வரைபட மேம்பாடு புதுப்பிக்கப்படாமல் உள்ளது.
எனவே, தமிழக அரசின் கொள்கை முடிவான புதிய அரசாணை வழியாக இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என முதல்வருக்கு வலியுறுத்துகிறோம்.
மேலும், நகராட்சியில் உள்ள அனைத்து வணிக கட்டடங்களையும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட தனிநபர் கமிட்டியை அமைக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், அரசின் கவனத்தை ஈர்க்க கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.