நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே செல்லப்பம்பாளையம் பிரிவு, கூட்டுறவு நகரைச் சேர்ந்தவர் அஜய்ஜோசப், 35. இவர், கடந்த, 26ம் தேதி, மாலை, 7:00 மணிக்கு, பொள்ளாச்சி நகரில் இருந்து, வடக்கிபாளையம் வழியாக தனது வீட்டிற்கு, பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சி.கோபாலபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரு நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று உயிரிழந்தார். பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.