ADDED : மே 18, 2024 11:19 PM

அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்:கோவனுாரை சேர்ந்தவர் கணேசன், 55. நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் கவுண்டம்பாளையம் பாரதி நகர் செல்லும் வழியில் உள்ள தடுப்பணையில், மதுபோதையில், தான் அணிந்திருந்த உடைகளை கழற்றி வைத்துவிட்டு, குளிக்க சென்றார். சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி இறந்தார்.
பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) சுரேஷ்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி இறந்த கணேசன் உடலை, நேற்று காலை மீட்டனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
