/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு தரப்பினர் மோதலில் ஒருவர் கொலை; மூவர் கைது
/
இரு தரப்பினர் மோதலில் ஒருவர் கொலை; மூவர் கைது
ADDED : மார் 28, 2024 11:12 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், படுகாயமடைந்த ஒருவர் இறந்தார். இதையடுத்து, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் நார் தொழிற்சாலையில் பணியாற்றும், துாத்துக்குடியை சேர்ந்த இசக்கி மாரிசெல்வம், 21, பாதாளம், 19, மற்றும் பாலமுருகன், 17, மூவரும், வேலை முடிந்து நள்ளிரவில் ரோட்டில் நடந்து சென்றனர்.
அதே பகுதியில் 'ரியல் எஸ்டேட்' தொழில் செய்யும், கரூரை சேர்ந்த சதாம்உசேன், 29, மற்றும் மணிமாறன், 32, ஆகியோர் எதிரில் வந்தனர். அப்போது, சதாம்உசேன் மற்றும் மணிமாறன் இருவரும், எதிரில் வந்த மூவரையும் பார்த்து, 'இந்த நேரத்தில் எங்கு செல்கிறீர்கள்' என கேட்டுள்ளனர்.
இதனால், இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில், கோபமடைந்த துாத்துக்குடியை சேர்ந்த மூவரும், சதாம்உசேன், மணிமாறனை இரும்பு கம்பியால் தாக்கினர். படுகாயம் அடைந்த இருவரையும், அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையிக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மூவரையும், போலீசார் கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மணிமாறன் நேற்று இறந்தார். இதை தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

