/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஒன்னு, ரெண்டு, மூணு...' வேட்பாளர்களின் கடைசி ஆயுதம்
/
'ஒன்னு, ரெண்டு, மூணு...' வேட்பாளர்களின் கடைசி ஆயுதம்
'ஒன்னு, ரெண்டு, மூணு...' வேட்பாளர்களின் கடைசி ஆயுதம்
'ஒன்னு, ரெண்டு, மூணு...' வேட்பாளர்களின் கடைசி ஆயுதம்
ADDED : ஏப் 18, 2024 05:19 AM
முன்பெல்லாம் தேர்தல் வந்துவிட்டால், பொள்ளாச்சி பகுதியிலுள்ள கிராமங்களில், வீடு, பொது இடங்களில் உள்ள சுவர்கள் வண்ணமயமாக மாறி விடும். திரும்பிய பக்கம் எல்லாம் ஒவ்வொரு கட்சியும் ஓவியங்களாகவும், போஸ்டர்களாகவும் மக்களிடம் பவ்யமாக ஓட்டளிக்கச் சொல்லி அன்பாக வற்புறுத்துவர்.
ஆனால், இப்போதெல்லாம் அந்த நிலை மாறி விட்டது. வேட்பாளரின் மனநிலையை புரிந்து கொண்ட பலர், 'பணம் கொடுத்தால் மட்டுமே தேர்தல் வேலை', என்று கறாராக நின்று விடுகின்றனர்.
கிராமங்களிலோ தேர்தல் பணிகள் அந்தோ பரிதாபம். இதனால், முக்கிய கட்சி வேட்பாளர்கள், 'நம் பிம்பத்தை மக்கள் மத்தியில் எப்படி கொண்டு சேர்ப்பது,' என, ஐடியா போட்டு வருகின்றனர். அதில், எப்படியும், ஓட்டுப்பதிவு மெஷின்களில், முதல் மூன்று வரிசைகளில், பிரதான கட்சி சின்னங்களே இருக்கும்; அதை வைத்து ஓட்டு வாங்கிடலாம்' என, திட்டமிட்டுள்ளனர். இதற்காக, கிராமங்களில், வாக்காளர்களை ஓட்டுச் சாவடிக்கு அழைத்து வருதற்காகவே, தனி 'டீம்' தயார்படுத்தப்பட்டுள்ளது. அந்த டீம், ஓட்டுப்பதிவு நாளன்று, 'எந்த பட்டனை அழுத்தணும்,' என வாக்காளர்களிடம் சொல்லி அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதற்கு, ஏற்கனவே, 'ஓட்டுக்கு துட்டு' கொடுத்து விட்டதால், வாக்காளர்கள் தங்கள் அன்பு கட்டளையை ஏற்பர் என்ற நம்பிக்கையில் கட்சியினர் வலம் வருகின்றனர்.

