ADDED : ஏப் 12, 2024 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த 2ம் தேதி ஆண்டு இறுதி தேர்வு துவங்கியது. அதில், 4 முதல், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, 22ம் தேதி அறிவியல் தேர்வு, 23ல் சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்று வரை, பள்ளிக்கு வந்த 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 22ம் தேதி வரை, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறுகையில், '22, 23 ஆகிய தேதிகளில் நடக்கும் தேர்வை, கட்டாயம் எழுத வேண்டும் என, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்வு முடிந்து, 24ம் தேதி முதல், 4 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். ஆசிரியர்கள், 26ம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும்,' என்றனர்.

