/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு
/
10, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு
ADDED : மே 23, 2024 02:14 AM
பொள்ளாச்சி: தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், கோடை விடுமுறை மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாகவும், மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும், கோடை காலத்தின் போது, சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில், சில தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு முன்னேறிய மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும் நிலையில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
பெற்றோர்கள் கூறியதாவது: 9 மற்றும் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்கள், அடுத்த வகுப்புக்கு முன்னேறிய நிலையில், 2024-25ம் கல்வியாண்டின் பாட வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாகச் செல்வதை தவிர்த்து, 'ஆன்லைன்' வாயிலாகவே ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் ஆர்வத்துடன் 'ஆன்லைன்' வகுப்புகளின் கவனம் செலுத்தி வருகின்றனர். கோடை வெயில் மற்றும் மழை காலத்தில் 'ஆன்லைன்' வகுப்பு நடத்துவது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு, கூறினர்.

