/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆன்லைன் டிரேடிங் ரூ.13 லட்சம் மோசடி
/
ஆன்லைன் டிரேடிங் ரூ.13 லட்சம் மோசடி
ADDED : செப் 14, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: கோவை மாநகர ஆயுதப்படை நான்காவது பட்டாலியனில் எஸ்.எஸ்.ஐ. ஆக பணிபுரிபவர், சந்திரா. கடந்த, 5ம் தேதி சுந்தரம் என்பவர் ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிகளவு சம்பாதிக்கலாம் என கூறி, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றார். தொடர்ந்து அவர் கூறியதன்பேரில், சந்திரா பல்வேறு நிறுவனங்களில் எட்டு லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். தொடர்ந்து வந்த நாட்களில் எவ்வித லாபமும் தரவில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துள்ளார்.
சந்திரா புகாரில் குனியமுத்தூர் போலீசார் சுந்தரம் மற்றும் அவரது கூட்டாளிகள் விஜயராகவன், ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.