/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை தொழில்துறையினருக்கு இனி வளர்ச்சி மட்டுமே!அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுஇன்று நிதியமைச்சர் வழங்குகிறார்!

ADDED : செப் 11, 2024 01:11 AM

கோவை:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், தொழில்துறையினருடன் சந்திப்பு இன்று மாலை 5:00 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், கோவை தொழில்துறையினர் இதுவரை சந்தித்து வந்த, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக, நேற்று தொழில்துறையினருடன் கலந்துரையாடல் கூட்டம், கொடிசியா வர்த்தக வளாகத்தில், மத்திய எம்.எஸ்.எம்.இ., அமைச்சகத்தின் கூடுதல் மேம்பாட்டு கமிஷனர் இஷிதா கங்குலி திரிபாதி தலைமையில் நடந்தது.
இன்று காலை, 10:00 மணியளவில், ஜி.எஸ்.டி., வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு, டெக்ஸ்டைல், லெதர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டங்களின் முடி வில், தொழில்துறையினரின் கோரிக்கைகள், அதிகாரிகளால் தொகுக்கப்பட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மாலை, 4:00 மணியளவில் வழங்கப்படவுள்ளது.
கோவையில் நேற்று நடந்த கூட்டத்தில், கொடிசியா, டேக்ட், கிரில், கோபியோ, கன்ட்ரோல் பேனல், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், கொங்கு தொழில்முனைவோர், கோஸ்மா, சிட்கோ, சீமா, சைமா உள்ளிட்ட, 30 தொழில் முனைவோர் சங்க நிர்வாகிகள், தங்கள் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர். கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். இக்கூட்டத்தை, கொடிசியா அமைப்பினர் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.