/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதுறை சாலையில் திறந்தவெளி 'பார்'
/
கூடுதுறை சாலையில் திறந்தவெளி 'பார்'
ADDED : ஜூன் 25, 2024 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் சமயபுரம் பகுதி உள்ளது.
இங்கு சுக்கு காபி கடை பகுதியில் இருந்து கூடுதுறை மலை செல்லும் சாலையில், இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்துகின்றனர். சாலையோரம் அமர்ந்து மது அருந்திவிட்டு அங்கேயே மது பாட்டில்களை வீசி செல்கின்றனர். திறந்தவெளி பார் போல் இப்பகுதியை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் இரவு நேரங்களில் அப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மேட்டுப்பாளையம் போலீசார் இப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு, சாலையோரம் மது அருந்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.---