ADDED : ஜூலை 16, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு;தொடர் கனமழையைத் தொடர்ந்து, முழு கொள்ளளவு எட்டிய காஞ்சிரப்புழை அணையின் மதுகுகள் நேற்று திறக்கப்பட்டன.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகே உள்ளது 30.78 மீட்டர் (101 அடி) உயரம் கொண்ட காஞ்சிரப்புழை அணை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சில தினங்களாக பெய்யும் கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனை தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்டியது. இதையடுத்து நேற்று மாலை, 4:00 மணிக்கு அணையின் மூன்று மதகுகள் திறக்கப்பட்டு, உபரி நீர் திறந்து விடப்பட்டது. ஆற்றின் கரையோரம் குடியிருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.