/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் ஆய்வகம் திறப்பு
/
அரசு பள்ளியில் ஆய்வகம் திறப்பு
ADDED : செப் 05, 2024 12:09 AM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் மணி நகரில் உள்ள அரசு நகரவை உயர்நிலை பள்ளியில், 53.30 லட்சம் ரூபாய் செலவில் கட்டிய அறிவியல் ஆய்வகம் திறக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம், மணி நகரில் அரசு நகரவை உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியதில் இருந்து அறிவியல் ஆய்வகம் இல்லாமல் இருந்தது. நகராட்சி சார்பில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 21 லட்சம் செலவில் புதிய அறிவியல் ஆய்வகமும், 15 லட்சம் ரூபாய் செலவில் கழிப்பறைகளும், 17.30 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுப்புற சுவரும் கட்டப்பட்டன.
இதன் திறப்பு விழா நேற்று அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவுக்கு நகர் மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் அசரப்அலி தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் அமுதா வரவேற்றார். நீலகிரி எம்.பி., ராஜா அறிவியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி, 30 வது வார்டு சாந்தி நகரில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 38 லட்சம் ரூபாய் செலவில், பசுமை பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை எம்.பி., ராஜா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.