/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 28, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவையில் அ.தி.மு.க., மாநகர் மாவட்டம் சார்பில், மூன்று இடங்களில் நேற்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
புலியகுளம் விநாயகர் கோவில் மற்றும் கிட்னி சென்டர் அருகிலும், சாயிபாபா காலனியிலும் நேற்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார். மாநகர் மாவட்ட செயலாளரான எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன், வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், இன்ஜினியர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். நீர் மோர் மட்டுமின்றி, இளநீர், ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி போன்றவை வழங்கப்பட்டது.

