/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'போக்ஸ்வேகன் சர்டிபைடு ப்ரீ ஓன்டு ஷோரூம்' திறப்பு
/
'போக்ஸ்வேகன் சர்டிபைடு ப்ரீ ஓன்டு ஷோரூம்' திறப்பு
ADDED : ஜூலை 04, 2024 05:20 AM

கோவை: கார்கள் விற்பனைக்கான 'தாஸ் வெல்ட் ஆட்டோ' என்ற பெயரில் உள்ள நிறுவனத்தை, 'போக்ஸ்வேகன் சர்டிபைடு ப்ரீ-ஓன்டு' என பெயர் மாற்றம் செய்து, தனது முதல் ஷோரூமை, கோவையில் போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் திறந்துள்ளது.
ஷோரூமை, ரமணி குழுமங்களின் நிர்வாக இயக்குனர் சுதர்சன், போக்ஸ்வேகன் பாசஞ்சர் கார்ஸ் இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா ஆகியோர் திறந்து வைத்தனர்.
புதிய ஷோரூமில், பல்வேறு நிறுவனங்களின் கார்கள் இடம் பெற்றிருப்பதோடு, பயன்படுத்தப்பட்ட போக்ஸ்வேகன் மாடல்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதன் வாயிலாக, இத்துறையில் தனித்து நிற்கும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு எவ்வித சிரமம் இல்லாத முழுமையான டிஜிட்டல்மயமாக்கப்பட்ட சேவைகளை வழங்க இருக்கிறது.
வாடிக்கையாளர்கள், தங்கள் கார்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்க, 'ஆட்டோபெஸ்ட் மெகா எக்ஸ்சேஞ்ச் மேளா' வரும் 20ம் தேதி வரை நடத்தவுள்ளது.