/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒப்பந்தப்படி கேரளாவுக்கு மதகு வழியாக நீர் திறப்பு
/
ஒப்பந்தப்படி கேரளாவுக்கு மதகு வழியாக நீர் திறப்பு
ADDED : ஆக 24, 2024 01:48 AM

வால்பாறை;மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள வால்பாறையில், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ், மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த மூன்று அணைகளும் தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ளதால், இருமாநில ஒப்பந்தப்படி, ஆண்டு தோறும் கேரளாவுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
மேல்நீராறு அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், கீழ் நீராறு அணை வழியாக அக்., மாதம், 1ம் தேதி முதல் ஜனவரி மாதம் வரை கேரளாவுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
இதே போல், சோலையாறு அணையிலிருந்து கேரளாவுக்கு ஆண்டு தோறும், 12.3 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதன் படி, நேற்று முன்தினம் முதல் சோலையாறு அணை மூன்று மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., பாசனத்திட்ட ஒப்பந்தப்படி, சோலையாறு அணையில் இருந்து, கேரளாவுக்கு வினாடிக்கு, 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கேரள சோலையாறு பவர்ஹவுஸ் பழுதானதால், மதகுகள் வழியாக இரண்டு நாட்கள் மட்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பவர்ஹவுஸ் செயல்பட துவங்கியதும், மதகு வழியாக நீர் திறப்பது நிறுத்தப்பட்டு, 'டனல்' வழியாக நீர் திறக்கப்படும்,' என்றனர்.