ADDED : ஆக 06, 2026 07:10 PM
மேட்டுப்பாளையம்: ‘இரண்டு பட்ஜெட்டிலும், விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கு திட்டங்கள் ஏதும் இல்லை’ என, தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள், தமிழக அரசுக்கு எதிராக தாசம்பாளையத்தில் கோஷமிட்டனர்.
சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் கூறியதாவது:
தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு பட்ஜெட்டுகளிலும், விவசாயிகள் எதிர்பார்த்த திட்டங்கள் ஏதும் இல்லை. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் இடம் பெறவில்லை. பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயிகள் கூறியது ஒன்றுமே இடம் பெறவில்லை. அரசு அறிவித்த திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. ஆவலோடு எதிர்பார்த்த கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடியும் இடம்பெறவில்லை. இந்த இரண்டு பட்ஜெட்டுகள், விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. வரும் 20ம் தேதி நடக்கவுள்ள கூட்டுறவு மானிய விவாத நாளில், தமிழக சட்டசபை முற்றுகை போராட்டம், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
