தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் முழுவீச்சில் கண்டறியும் பணி

பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் முழுவீச்சில் கண்டறியும் பணி

பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் முழுவீச்சில் கண்டறியும் பணி


ADDED : ஆக 06, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரமடை: காரமடை கல்வி வட்டாரத்தில், பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் குறித்து, அரசுப் பள்ளிகளில், வட்டார பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

காரமடை கல்வி வட்டாரத்தில் உள்ள காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உட்பட பகுதிகளில், 144 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் வெளிமாநிலங்களை சேர்ந்தவர் பலர், காரமடை கல்வி வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில், அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று, அரசு பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி மாணவ, மாணவியரை பள்ளிகளில் சேர்த்தனர்.

அவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியை கற்றுத் தரவும் சிறப்பு ஏற்பாடுகள் என, கல்வி வட்டாரத்தில் அனைத்து தரப்பினருக்கும் கல்வி கிடைக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். ஒருபகுதியாக, முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர், யாராவது நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் உள்ளனரா, இடைநிற்றல் இருக்கிறதா என்பது குறித்து, வட்டார கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

காரமடை வட்டார கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

கல்வி வட்டாரத்தில் அரசு பள்ளிகளில், அசாம், ஹரியானா, ஆந்திரா, மேற்குவங்கம், கேரள, பீகார், ஜார்கண்ட் என வெளிமாநில குழந்தைகள் சுமார், 60 பேர் படிக்கின்றனர். இவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு தினமும் வருகிறார்களா என கண்காணித்து வருகிறோம். அதே போல், 144 அரசு பள்ளிகளில் பள்ளி இடைநிற்றல் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். அடுத்த கட்டமாக, இதில் பள்ளிக்கு நீண்ட நாட்கள் வராத மாணவ, மாணவியரின் விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்களது வீட்டுக்கே சென்று மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்க்க முயற்சி செய்வோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us