/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடனடி தயார் காய்கறிக்கு வாய்ப்பு; வழிகாட்டுகிறது வேளாண் பல்கலை
/
உடனடி தயார் காய்கறிக்கு வாய்ப்பு; வழிகாட்டுகிறது வேளாண் பல்கலை
உடனடி தயார் காய்கறிக்கு வாய்ப்பு; வழிகாட்டுகிறது வேளாண் பல்கலை
உடனடி தயார் காய்கறிக்கு வாய்ப்பு; வழிகாட்டுகிறது வேளாண் பல்கலை
ADDED : ஆக 01, 2024 01:18 AM
கோவை : சமீப காலங்களில் உடனடி தயார் காய்கறிக்கு அதிக சந்தை வாய்ப்பு எழுந்துள்ளதால், இதை தொழிலாக செய்வது எளிது என்கிறார், வேளாண் பல்கலை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மைய இணை பேராசிரியர் வீரண்ணன் அருணகிரிதாரி.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், தொழில்முனைவோர் சார்ந்த பல்வேறு பயிற்சி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மசாலா தயாரிப்பு, ஊறுகாய், காளான் உற்பத்தி, பேக்கரி பொருட்கள், நெல்லி, ஸ்குவாஷ், காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல் உட்பட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சமீபத்தில் வேளாண் பல்கலையில், காய்கறி மற்றும் பழங்கள் மதிப்பு கூட்டுதல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. 20க்கும் மேற்பட்டோர் பயிற்சியை, செய்முறை விளக்கங்களுடன் பெற்றனர்.
இதில், வேளாண் பல்கலை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மைய இணை பேராசிரியர் வீரண்ணன் அருணகிரிதாரி கூறியதாவது:
உடனடி தயார் காய்கறி, உலர் பழங்களின் சந்தை வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு பெரிய உபகரணங்கள், முதலீடு, போன்றவை தேவையில்லை. சீசன் நேரங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் காய்கறி, பழங்களை கொள்முதல் செய்து மதிப்பு கூட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக, கீரை, வாழைத்தண்டு போன்ற காய்கறியை, சுகாதாரமான முறையில் 'கட்' செய்து வினியோகித்தால், வாங்கிக்கொள்ள மக்கள் தயாராக உள்ளனர்.
பழங்களில், வாழை, கொய்யா, மாம்பழம் என பலவற்றில் மதிப்பு கூட்டலாம். இதற்கான வழிகாட்டுதலை, வேளாண் பல்கலையில் வழங்குகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.