/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமானப்படை தள நிர்வாக தடைக்கு எதிர்ப்பு; கிராம சபையில் தீர்மானம்
/
விமானப்படை தள நிர்வாக தடைக்கு எதிர்ப்பு; கிராம சபையில் தீர்மானம்
விமானப்படை தள நிர்வாக தடைக்கு எதிர்ப்பு; கிராம சபையில் தீர்மானம்
விமானப்படை தள நிர்வாக தடைக்கு எதிர்ப்பு; கிராம சபையில் தீர்மானம்
ADDED : ஆக 16, 2024 12:14 AM

சூலுார் : ''வீடுகள் கட்ட விமானப்படை தள நிர்வாகத்திடம் தடையின்மை சான்று பெற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,'' என, காடாம்பாடி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காடாம்பாடி, காங்கயம் பாளையம், அப்பநாயக்கன்பட்டி, கலங்கல் மற்றும் திருப்பூர் மாவட்டம் பருவாய் ஊராட்சி பகுதிகளில், விமானப்படைத் தளம் உள்ளது. தளத்தை விரிவாக்கம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில், விமானப்படைத் தளத்தை சுற்றி, 4 கி.மீ., தூரத்துக்கு, வீடுகள் மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள, விமானப்மடைத்தள நிர்வாகத்தின் தடையின்மை சான்று பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐந்து கிராமங்களில் வீடு கட்டும் பணி முடங்கியுள்ளது.
இந்நிலையில், காடாம்பாடி ஊராட்சி கிராம சபை கூட்டம், செங்கத்துறையில் தலைவர் இந்திராணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், வீடு கட்ட உள்ள தடையை ரத்து செய்ய வேண்டும் என, பதாகைகளை ஏந்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தடையின்மை பெற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் யூனியன் கவுன்சிலர் தங்கராஜ் கூறுகையில், ''தடையின்மை சான்று பெற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், ஐந்து கிராம மக்களும் சேர்ந்து போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.

