/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உக்கடத்தில் புது பஸ் ஸ்டாண்ட் கட்ட உள்ள காலியிடத்தில் கம்பி வேலி போட எதிர்ப்பு
/
உக்கடத்தில் புது பஸ் ஸ்டாண்ட் கட்ட உள்ள காலியிடத்தில் கம்பி வேலி போட எதிர்ப்பு
உக்கடத்தில் புது பஸ் ஸ்டாண்ட் கட்ட உள்ள காலியிடத்தில் கம்பி வேலி போட எதிர்ப்பு
உக்கடத்தில் புது பஸ் ஸ்டாண்ட் கட்ட உள்ள காலியிடத்தில் கம்பி வேலி போட எதிர்ப்பு
ADDED : மார் 11, 2025 10:17 AM

கோவை: உக்கடம் மேம்பாலத்தின் இறங்கு தளத்துக்கு அருகே, புது பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள காலியிடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி போடுவதற்கு, துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தடுத்து நிறுத்தினர்.
உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிக்காக, சி.எம்.சி., காலனியில் இருந்த துாய்மை பணியாளர்களது வீடுகள் இடிக்கப்பட்டன. அவர்களுக்கு, புல்லுக்காடு மைதானத்தில் தற்காலிகமாக தகர கூடாரம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
மேம்பாலத்துக்கு அருகே மீதமுள்ள இடத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் துாய்மை பணியாளர்களுக்கு இன்னும் வீடு ஒதுக்கவில்லை.
இச்சூழலில், மேம்பாலம் இறங்கும் பகுதியில் உள்ள காலியிடத்தில், உக்கடம் புது பஸ் ஸ்டாண்ட்டின் ஒரு பகுதியை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
காலியிடத்தில் தற்போது டவுன் பஸ்கள், வேன்கள், கார்கள் நிறுத்தப்படுகின்றன. அவ்விடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைப்பதற்கான பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. இதற்காக, கற்கள் தருவிக்கப்பட்டு, குழி தோண்டப்பட்டது.
இதையறிந்த துாய்மை பணியாளர்கள், கம்பி வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மாற்று வீடு வழங்கி விட்டு, வேலி அமைக்க, அவர்கள் வலியுறுத்தினர்.
அதன்பின், செல்வபுரத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, வீடு ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பினர். விரைவில் குலுக்கல் நடத்தி, வீடு ஒதுக்குவதாக வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.