/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் ஓட்டு எண்ணும் அறைகளில் 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்த உத்தரவு
/
கோவையில் ஓட்டு எண்ணும் அறைகளில் 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்த உத்தரவு
கோவையில் ஓட்டு எண்ணும் அறைகளில் 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்த உத்தரவு
கோவையில் ஓட்டு எண்ணும் அறைகளில் 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்த உத்தரவு
ADDED : ஏப் 27, 2024 02:03 AM

கோவை;கோவை லோக்சபா தொகுதியில் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் 'விவி பேட்' இயந்திரங்கள், ஜி.சி.டி., கல்லுாரியில் உள்ள, 'ஸ்ட்ராங் ரூம்'களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நேற்று நடந்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்யப்பிரதா சாஹு, அறிவுரைகள் வழங்கினார்.
அப்போது, ஓட்டு எண்ணும் நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன், ஓட்டு எண்ணும் அறைகளில் 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்தி, இணைப்பு வழங்கி, சரிபார்க்க வேண்டும். ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு, பயிற்சி அளிக்க வேண்டும்.
ஓட்டு எண்ணும் நாளன்று நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும், வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். 'ஸ்ட்ராங் ரூம்'களில் இருந்து கன்ட்ரோல் யூனிட்டுகளை எடுத்து வருதல், மேஜையில் வைத்து சீல் உடைத்து பட்டன்களை அழுத்தி, ஓட்டு விபரங்களை, ஏஜன்ட்டுகளிடம் காண்பிப்பது உள்ளிட்ட, அனைத்து நடைமுறையையும் பதிவு செய்ய வேண்டும்.
முன்னெச்சரிக்கையாக, அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

