/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீயணைப்பு கருவி தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு
/
தீயணைப்பு கருவி தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு
தீயணைப்பு கருவி தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு
தீயணைப்பு கருவி தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு
ADDED : ஏப் 22, 2024 11:04 PM
பெ.நா.பாளையம்:அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் தீயணைப்பு கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க தீயணைப்பு துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
தற்போது, கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் மட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தீ பிடிக்கும் அபாயம் உள்ளது.
இதை தடுக்க, தொழில் நிறுவனங்களில் தீத்தடுப்பு சாதனங்கள் முறையாக இயங்குகிறதா, போதுமான அளவு தண்ணீர் வசதி உள்ளதா என்பது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தொழில் நிறுவனங்கள் மூடப்படும் போது, மின் ஒயர் பழுது ஏற்பட்டுள்ளதா, காற்றோட்ட வசதி உள்ளதா, தீப்பிடிக்கும் பொருட்கள் பாதுகாப்பான நிலையில் உள்ளதா என கண்காணிக்க வேண்டும்.
தீ பிடிக்கும் பொருட்களை மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் குவிக்கக் கூடாது. பீடி, சிகரெட் புகைத்து வீசி சென்றால், தீ பிடிக்கும் அபாயம் உள்ளது.
தொழில் நிறுவனத்தினர், குடோன் வைத்திருப்போர், பொது இடங்களில் எளிதில் தீ பிடிக்கும் அபாயகரமான பொருட்களை குவிக்க கூடாது.
அனைத்து தொழில் நிறுவனங்களிலும், தீயணைப்பு கருவிகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
தண்ணீர் தொட்டிகளில் நீர் போதுமான அளவு வைத்திருக்க வேண்டும் என, அறிவுரை வழங்கி உள்ளனர்.

