/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ காப்பீடு மறுப்பு இழப்பீடு வழங்க உத்தரவு
/
மருத்துவ காப்பீடு மறுப்பு இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : ஜூலை 27, 2024 01:54 AM
கோவை;மருத்துவ காப்பீடு தொகை வழங்க மறுத்ததால், இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
கோவை, கணபதி அலமேலு மங்காபுரத்தை சேர்ந்த ராஜகோபால், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், மருத்துவ காப்பீடு செய்திருந்தார். 2022, ஜூலை 15ல், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதற்கான மருத்துவ செலவு தொகை, 6.31 லட்சம் ரூபாய், வழங்க கோரி விண்ணப்பித்தார். நெட் ஒர்க் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்று கூறி, முழு தொகை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்தது.
இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகை, 5.56 லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.