/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஐ போன் டிஸ்பிளே' பழுதுஇழப்பீடு வழங்க உத்தரவு
/
'ஐ போன் டிஸ்பிளே' பழுதுஇழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : மார் 29, 2024 12:39 AM
கோவை;ஐ போன் டிஸ்பிளே பழுதானதால், வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை, பீளமேடு, அண்ணா நகரை சேர்ந்த ரவிச்சந்திரன், ஆர்.எஸ்.புரத்திலுள்ள 'கன்சாலிடேட் பிரிமியம் ரீடெய்லர்' என்ற கடையில், 2017, ஜன., 18ல், 82,000 ரூபாய்க்கு 'ஆப்பிள் ஐ போன் செவன் பிளஸ்' என்ற மாடல் வாங்கினார். இதற்கு, தனியாக 4,999 ரூபாய் செலுத்தி இன்சூரன்ஸ் செய்தார்.
சில மாதங்களில், 'டிஸ்பிளே' பழுதானதால், ஷோரூமிற்கு எடுத்து சென்று, புதிய மொபைல் தருமாறு கேட்டார். புதிய மொபைல் போன் தருவதாக கூறி, ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் மாற்றி தரப்படவில்லை.
இதனால் இழப்பீடு கேட்டு, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ரவிசந்திரன் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர் வாங்கிய மொபைல் போனுக்கான தொகை, 82,000 ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டும். மன உளச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.

