/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் கேமராக்களுக்கு ஜெனரேட்டர், யு.பி.எஸ்., வசதி செய்ய உத்தரவு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் கேமராக்களுக்கு ஜெனரேட்டர், யு.பி.எஸ்., வசதி செய்ய உத்தரவு
ஓட்டு எண்ணும் மையத்தில் கேமராக்களுக்கு ஜெனரேட்டர், யு.பி.எஸ்., வசதி செய்ய உத்தரவு
ஓட்டு எண்ணும் மையத்தில் கேமராக்களுக்கு ஜெனரேட்டர், யு.பி.எஸ்., வசதி செய்ய உத்தரவு
ADDED : மே 10, 2024 01:28 AM
கோவை;கோவையில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தில், தரமான 'சிசி டிவி' கேமராக்கள், ஜெனரேட்டர் மற்றும் யு.பி.எஸ்., வசதி செய்ய, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையமான ஜி.சி.டி., கல்லுாரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள 'ஸ்ட்ராங் ரூம்'கள் மற்றும் வராண்டா, நுழைவாயில் மற்றும் ஓட்டு எண்ணும் கட்டடத்தை சுற்றிலும், 250 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றை கண்காணிக்க, போலீஸ் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணித்து வருகின்றனர். இருந்தாலும், இயற்கை பேரிடர்களால் அவ்வப்போது கேமராக்களில் பழுது ஏற்படுகிறது. சில நாட்களுக்கு முன் வீசிய சூறாவளி காற்றுக்கு, வெளிப்புறத்தில் உள்ள கேமராக்களின் ஒயர் இணைப்பு துண்டானது. மழை நீர் சென்றதால், ஒரு கேமரா பழுதானது. இதுபோன்ற பிரச்னை, மாநிலம் முழுவதும் அடிக்கடி ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண, தேர்தல் ஆணைய அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் ஆலோசித்தனர்.அப்போது, உயர்தரமுள்ள 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்த வேண்டும்.
மின் தடை ஏற்பட்டாலும், தானாக மின்சாரம் சப்ளையாகும் வகையில், டீசல் ஜெனரேட்டர் நிறுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஸ்ட்ராங் ரூம்களின் 'சிசி டிவி' கேமராக்களுக்கு யு.பி.எஸ்., வசதி செய்திருக்க வேண்டும்.
மின் தடை ஏற்படும் சமயத்தில், ஜெனரேட்டர் இயங்கி, மின் சப்ளையாவதற்கு ஏற்படும்இடைப்பட்ட நேரத்துக்குள், காட்சிப்பதிவு தடையாகாத வகையில் யு.பி.எஸ்., வசதி ஏற்படுத்த வேண்டும்.
கேமராக்களுக்கு சமச்சீரான மின்சாரம் சப்ளை செய்யும் வகையில், தரமான ஸ்டெபிலைசர் இணைப்பு கொடுக்க வேண்டும் என, தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுரை வழங்கியிருக்கின்றனர்.