/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
/
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : மே 24, 2024 01:10 AM
கோவை;மழைநீர் செல்லும் வழித்தடங்களில் அடைப்பை சரிசெய்வதுடன், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும் மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
மாநகராட்சி பகுதிகளில் குளங்களுக்கு செல்லும் நீர் வழித்தடங்கள், மழைநீர் வடிகால்கள் தற்போது துார்வாரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட கிக்கானி பள்ளி அருகே பட்டேல் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார்.
மழைநீர் செல்லும் இடங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய உத்தரவிட்ட அவர், மழை நீரை உடனடியாக வெளியேற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பணிகள் குறித்து அலுவலகர்களுக்கு அறிவுறுத்தினார்.
லங்கா கார்னரில் ரெடிமேடு கான்கிரீட் கட்டமைப்பு கொண்டு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.
வாகனங்கள் செல்லும் வகையில் இப்பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி கமிஷனர் செந்தில்குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.