/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு கட்டித்தராமல் ஏமாற்றிய நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு தர உத்தரவு
/
வீடு கட்டித்தராமல் ஏமாற்றிய நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு தர உத்தரவு
வீடு கட்டித்தராமல் ஏமாற்றிய நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு தர உத்தரவு
வீடு கட்டித்தராமல் ஏமாற்றிய நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு தர உத்தரவு
ADDED : மார் 23, 2024 10:19 PM
கோவை : வீடு கட்டுவதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நிறுவனம், பணத்தை திருப்பி கொடுப்பதோடு, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
அன்னுார் தாலுகா, எஸ்.எஸ்.குளம் அருகே எஸ்.பி.ஐ.ஓ.ஏ., என்கிளேவ் பகுதியில், வீடு கட்டுவதற்காக பிரேமலதா என்பவர், சன் ஸ்மார்ட் பில்டர் என்ற நிறுவனத்திடம், 525 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டு மனை வாங்கி கிரயம் செய்தார். அதில், 425 சதுர அடியில், ரூ.10.7 லட்சத்தில் வீடு கட்டுவதற்கு, 2018, ஜனவரியில் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதன்படி, பிரேமலதா தனியார் நிறுவனத்திடம் கடன் வாங்கி ரூ.8.5 லட்சம் செலுத்தினார்.ஆனால், ஒப்பந்தம் செய்து ஓராண்டுக்கு மேலாகியும், கட்டுமான நிறுவனம் புதியவீடு கட்ட பூமி பூஜை கூட போடவில்லை. கடன் கொடுத்த நிறுவனம், பிரேமலதா மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. இதனால், உடனடியாக வீடு கட்டிதரக்கோரி கட்டுமான நிறுவனத்திடம் வற்புறுத்தியும், அதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட பிரேமலதா, வீடு கட்ட செலுத்திய தொகை மற்றும் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''பிரேமலதாவிடம் பெற்ற கட்டுமான தொகை, 8.5 லட்சம் ரூபாயை, 11 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

