/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 03, 2024 09:57 PM

கோவை: ஜி.கே.என்.எம்., மருத்துவமனை சார்பில், உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குழுவின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்வு லட்சுமி மில்ஸ் மருத்துவமனையில் நடந்தது. கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் ரோஹித் நாதன் துவக்கிவைத்தார்.
உடல் உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து இந்நிகழ்வில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உடல் உறுப்பு கொடையாளர்களை காட்டிலும், உடல் உறுப்பு செயல் இழந்து இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதை நிகழ்வில் வலியுறுத்தினர்.
இதில், மருத்துவமனை சி.இ.ஓ., ரகுபதி வேலுசாமி, மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.