ADDED : மே 10, 2026 03:42 PM
அ நிறம் | அளவு
கோவை: நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சார்பில், அங்கக வேளாண்மை பயிற்சி, வரும் 13ம் தேதி நடக்கிறது.
அங்கக வேளாண்மையின் அடிப்படை நெறிமுறைகள், அங்கக களை மேலாண்மை, அங்கக பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அங்கக உர நிர்வாகம், அங்ககச் சான்றிதழ், இடுபொருட்கள் தயாரிப்பு, அங்கக விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து, சொற்பொழிவு மற்றும் செயல்விளக்கம் காண்பிக்கப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.750. விருப்பமுள்ளவர்கள் 0422– 2455055, 6611206 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
