/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளை பொருட்கள் விற்க நேரடிச்சந்தை இயற்கை விவசாயிகளுக்காக ஏற்பாடு
/
விளை பொருட்கள் விற்க நேரடிச்சந்தை இயற்கை விவசாயிகளுக்காக ஏற்பாடு
விளை பொருட்கள் விற்க நேரடிச்சந்தை இயற்கை விவசாயிகளுக்காக ஏற்பாடு
விளை பொருட்கள் விற்க நேரடிச்சந்தை இயற்கை விவசாயிகளுக்காக ஏற்பாடு
ADDED : ஜூன் 03, 2024 11:51 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், இயற்கை விவசாயிகள், விளைபொருட்களை விற்பனை செய்ய நேரடிச்சந்தை நடந்தது.
பொள்ளாச்சி பூர்ணா புரொடியூசர் கம்பெனி மற்றும் தாய் மண் சார்பில், இயற்கை விவசாயிகளின் நேரடிச் சந்தை, மரப்பேட்டை வீதி எம்.கே.பி., வணிக வளாகத்தில் நடந்தது.
பொள்ளாச்சி பூர்ணா புரொடியூசர் கம்பெனி லிமிடெட் (உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்) தலைவர் நித்தியானந்தன், நேரடிச்சந்தையை துவக்கி வைத்தார்.
அதில், பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்கள், சுத்தமான தேன், கரும்புச் சர்க்கரை, கருப்பட்டி, நாட்டுக்காய்கனிகள், செடி மற்றும் கொடி வகைகளின் விதைகள், மண்பானைகள், பனையோலை உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்கள், விவசாயிகள் கொண்டு வந்தனர்.
நிறுவனத்தினர் கூறுகையில், 'பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், நுாற்றுக் கணக்கான விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்டு, வாணவராயர் வேளாண் கல்லுாரியின் வழிகாட்டுதலோடு, பொள்ளாச்சி பூர்ணா புரொடியூசர் கம்பெனி (உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்) இயங்கி வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விவசாயத்தை அழிவில் இருந்து காத்திடவும், உழவுத்தொழில் மேன்மையடையும், வியாபார யுக்தியை கண்டறிந்து விவசாயத்தை லாபகரமாக செய்ய முடியும் என்பதை நிருபிக்கும் வகையில், இந்த நேரடி சந்தை துவக்கப்பட்டுள்ளது. மாதத்தில் ஒரு நாள் இந்த சந்தை நடத்தப் படும்,' என்றனர்.