/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓ.ஆர்.எஸ்., கரைசலை வைத்திருக்க அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவு
/
ஓ.ஆர்.எஸ்., கரைசலை வைத்திருக்க அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவு
ஓ.ஆர்.எஸ்., கரைசலை வைத்திருக்க அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவு
ஓ.ஆர்.எஸ்., கரைசலை வைத்திருக்க அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவு
ADDED : ஏப் 28, 2024 02:04 AM
கோவை;அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ்., கரைசலை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சுகாதார துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள், கர்ப்பிணிகளை காக்க அவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளை காலை, 11:00 மணிக்கு முன் வழங்க, சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், வெயிலால் பாதிக்கப்பட்டு களைப்படைவோருக்கு, ஓ.ஆர்.எஸ்., கரைசலை தயார் நிலையில் வைக்க, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ்., கரைசலை தயார் செய்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சோர்வுடன் வருவோருக்கு, இக்கரைசலை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும்,'' என்றார்.

