/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளி நோயாளிகள் கவுன்ட்டர் விரைவில் திறக்க ஏற்பாடு
/
வெளி நோயாளிகள் கவுன்ட்டர் விரைவில் திறக்க ஏற்பாடு
ADDED : செப் 12, 2024 09:42 PM

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன் மருத்துவமனையில் உள்ள வெளிநோயாளிகள் கவுன்ட்டரில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின் சம்பந்தப்பட்ட சிகிச்சை பிரிவுக்கு சென்று டாக்டர்களிடம் பரிசோதனை செய்யவேண்டும். இந்நிலையில் வெளிநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் இரு கவுன்ட்டர்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
இந்நிலையில், அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் செல்லும் நுழைவாயில் பகுதியில் புதிதாக, 5 கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை புது கவுன்ட்டர் பயன்பாட்டுக்கு வரவில்லை.
டீன் நிர்மலா கூறுகையில், “தற்போது கணினிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. விரையில் கவுன்ட்டர் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்றார்.

