/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.16 கோடி மோசடி வழக்கில் உரிமையாளருக்கு 10 ஆண்டுசிறை
/
ரூ.16 கோடி மோசடி வழக்கில் உரிமையாளருக்கு 10 ஆண்டுசிறை
ரூ.16 கோடி மோசடி வழக்கில் உரிமையாளருக்கு 10 ஆண்டுசிறை
ரூ.16 கோடி மோசடி வழக்கில் உரிமையாளருக்கு 10 ஆண்டுசிறை
ADDED : ஆக 30, 2024 10:35 PM

கோவை:தங்க நகை மற்றும் ஆடு, மாடு வளர்ப்பு நிதி நிறுவனம், 16 கோடி ரூபாய் மோசடி வழக்கில், உரிமையாளருக்கு 10ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை, டாடாபாத்தில், முல்லை குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், 2018- 19 ம் ஆண்டுகளில் செயல்பட்டு வந்தது. இதன்கிளை அலுவலகம் கோபி, ஈரோடு, மேட்டூரில் இயங்கி வந்தது. இந்நிறுவனத்தினர் இயற்கை வேளாண் உரம் உற்பத்தி செய்தல், நாட்டு மாடு மற்றும் ஆடு வளர்ப்பு , தங்க நகை முதலீடு திட்டத்தில், டெபாசிட் செய்வோருக்கு அதிக வட்டி தருவதாக விளம்பர படுத்தினர்.
ஆடு, மாடு வளர்ப்பு திட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 8,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரையும், தங்கை நகை திட்டத்தில், 13,000 ரூபாய் முதலீடு செய்தால், 101 நாட்கள் கழித்து, ஒரு பவுன் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவித்தனர்.
இதை நம்பி, 387 பேர், 15.92 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். ஆனால், டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திரும்பி தராமல் ஏமாற்றினர். இது தொடர்பாக, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில், நிதி நிறுவன உரிமையாளர் சேலம், குளத்துார் அருகேயுள்ள ஆலமரத்து பட்டியை சேர்ந்த குறிஞ்சிநாதன்,42, சேலத்தை சேர்ந்த கதிர்வேல்,39, அண்ணாத்துரை, சத்தியமூர்த்தி, 37, அருணாரெமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது,கோவை 'டான்பிட்' கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி செந்தில் குமார், குற்றம் சாட்டப்பட்டவர்களில், குறிஞ்சி நாதனுக்கு, 10 ஆண்டு சிறை, 15.92 கோடி ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அபராத தொகையில், 15.91 கோடியை, பாதிக்கப்பட்ட 386 பேருக்கு விகிதாச்சர அடிப்படையில் பிரித்து கொடுக்கவும், மீதி தொகையை அரசுக்கு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் கண்ணன் ஆஜராானர்......