/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓசோன் - விழிப்புணர்வு ஏற்படுத்தணும்!
/
ஓசோன் - விழிப்புணர்வு ஏற்படுத்தணும்!
ADDED : செப் 15, 2024 11:38 PM

விழிப்புணர்வு ஏற்படுத்தணும்!
கண்ணபிரான், ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்: ஓசோன் படலம் குறித்து, முதலில் அடிப்படையான புரிதலை பள்ளி பருவம் முதல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த படலம் பாதிக்கப்படுவதால் பூமியின் சமநிலையிலும் வேறுபாடு ஏற்படும்.
இந்த பாதிப்பு பேரழிவை உண்டாக்கும். ஓசோன் படலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வாயுவை வெளிப்படுத்தும் ஏசி போன்ற சாதனங்கள் தற்போதைய சூழலில் அதிகமான பயன்பாட்டில் உள்ளது. அவற்றை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள முடியும்.
சுயநலத்தோடு சிந்திக்காமல் அடுத்துவரும் தலைமுறைகளும் பாதுகாப்பான சூழலில் இருப்பதற்கு, பள்ளி பருவம் முதல் ஓசோன் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதற்கான வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

