/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் கட்டண பார்க்கிங் தேவை
/
ரயில்வே ஸ்டேஷனில் கட்டண பார்க்கிங் தேவை
ADDED : ஆக 31, 2024 02:01 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணியர் பலர், கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப்பில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்து வருகின்றனர்.
பைக் மற்றும் காரில் வரும் சிலர், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் பார்க்கிங் செய்து செல்கின்றனர்.
இதில், சில வாகன ஓட்டுநர்கள் திருட்டு பயம் காரணமாக, ஆட்டோவில் வருகின்றனர். எனவே, ரயில் பயணியர் நலன் கருதி வாகனங்களை நிறுத்தி செல்ல, கட்டண பார்க்கிங் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
ரயில் பயணியர் கூறுகையில், 'கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு, ஆட்டோவில் வந்து செல்வதால் தினமும் கூடுதல் செலவு ஏற்படுகிறது. பயணியர் நலன் கருதி, விரைவில் கட்டண பார்க்கிங் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். அதுவரை, ரயில் இயக்கும் நேரத்துக்கு அரசு பஸ் இகுயக்க வேண்டும்,' என்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில், 'ஆட்டோவில் பயணம் செய்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது இல்லை. அரசு நிர்ணயித்த அளவுக்கு அதிகமாக பணம் வாங்குவதில்லை,' என்றனர்.