/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் பிரச்னை தீர்க்க முன்னுரிமை பாலக்காடு பா.ஜ., வேட்பாளர் உறுதி
/
குடிநீர் பிரச்னை தீர்க்க முன்னுரிமை பாலக்காடு பா.ஜ., வேட்பாளர் உறுதி
குடிநீர் பிரச்னை தீர்க்க முன்னுரிமை பாலக்காடு பா.ஜ., வேட்பாளர் உறுதி
குடிநீர் பிரச்னை தீர்க்க முன்னுரிமை பாலக்காடு பா.ஜ., வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 23, 2024 02:32 AM

பாலக்காடு;குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பேன் என, பாலக்காடு தொகுதி பா.ஜ., வேட்பாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் கிருஷ்ணகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றால், பாலக்காடு மாவட்டம் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பேன்.
அதேபோல் கஞ்சிக்கோடு தொழில்துறையில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கும், போதிய கல்வி வசதிகள் இல்லாததை நிவர்த்தி செய்வதற்கும், மருத்துவ வசதிகளை அதிகரிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
மத்திய அரசு மாவட்டத்திற்கு அனுமதித்த 'ஜல்ஜீவன்' திட்டம் உட்பட பல திட்டங்கள், தற்போது பதவியில் இருக்கும் எம்.பி., முயற்சி எடுத்து செயல்படுத்தத் தவறிவிட்டார்.
மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட அனைத்து மத்திய அரசு திட்டங்களும், தன் முயற்சியின் பலனாக வந்தன என்று அவர் உரிமை கொண்டாடுகிறார். பாலக்காடு ஐ.டி., பூங்கா நிறுவுவது, மாவட்டத்திற்கு வேளாண் தொகுப்பு திட்டத்தை அமல்படுத்துவது ஆகியவை எனது தேர்தல் வாக்குறுதியாகும்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட் கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மத்தியில் பா.ஜ., ஆட்சி அமையும். அதேபோன்று, கேரள மாநிலத்திலம், பா.ஜ., வெற்றி பெறும். இவ்வாறு, கூறினார்.

